எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர்
தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, புதிய அரசியல் கட்சியைத் ஆரம்பிப்பதற்கு எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம்.
அமெரிக்க சட்டங்களை அமுல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டார். நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும் எனக் கூறினார்.