பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில், நீதிமன்றத் தடையை மீறிப் பங்கெடுத்தமை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா காவல்துறையினர் மீண்டும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், நேற்று கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் ஊடாக, சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தன்னிடம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக இரண்டு மணித்தியாலங்கள் வரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் இன்று கிளிநொச்சியில் சிறிலங்கா காவல்துறையினர் மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.க.சிவாஜிலிங்கத்திடமும். ஒட்டுசுட்டான் காவல்துறையினர் இன்று விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.