உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் இயக்குநரான தலைமை மருத்துவர் மைக்கேல் ரியான் (Michael Ryan) தெரிவித்துள்ளார்.
“கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த சிந்தனை இயல்புக்கு மாறானது.
கொரோனா தடுப்பூசியால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைக்கப்படுமே தவிர, கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து விடாது.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவலைக் குறைக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்போதைய புள்ளிவிவரங்களின் படி, கொரோனா தடுப்பூசியால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும்.
அதை அப்படியே வேகப்படுத்தினால், கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.