தனது தந்தையாரின் இறுதிச் சடங்கிற்கு சென்றுள்ள ஒன்ராரியோவைச் சேர்ந்த பெண்ணொருவர் கனடா திரும்புவது கனவு தான் என்று கூறியுள்ளார்.
கடந்த 28ஆண்டுகளாக ஒன்ராரியோவில் வசித்து வரும் அவர், வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளார். தற்போது அவர் மீண்டும் ஒன்ராரியோவுக்கு திரும்புவதாக இருந்தால் கனடிய அரசாங்கத்தின் அறிவிப்பின் பிரகாரம் கட்டாய விடுதித் தனிமைப்படுத்தலில் பங்கேற்க வேண்டியுள்ளது.
இதற்காக இரவொன்றுக்கு 3ஆயிரத்து 458டொலர்கள் செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் கனடாவுக்கு மீண்டும் திரும்புவது கனவாகிவிடுமோ என்று கூறுகின்றார்.
அத்துடன் கிறிஸ்டினா டீக்சீரா (Cristina Teixeira) என்ற இந்தப் பெண் கனடாவில் வணிக ஆய்வாளராக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.