ஒன்ராரியோ மாகாண கலைத்துறையில் 24 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக மாகாண கலாசார, மரபுரமைகள் அமைச்சர் லிசா மேக்லியோட் (Lisa MacLeod) தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் 140வரையிலான கலைத்துறை அமைப்புக்கள் காணப்படுவதாகவும் அவை அனைத்திற்கும் இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஒருமில்லியன் டொலர்கள் நேரடியாகச் செல்லவுள்ளதென்றும் அவர் கூறினார்.
கலைஞர்கள் மற்றும் புத்தாக்கத்துறையினரின் பொருளாதார மீள் எழுச்சிக்கு தொடர்ந்தும் தாம் அதீத கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.