அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என, பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இன்று அவர் தேஜ்புரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பேசும்போது
‘‘நாங்கள் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்குவோம்.
தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு தினக்கூலி 365 ரூபாவாக உயர்த்தப்படும்.
ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
ஒவ்வொரு மாதமும் 200 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்’’ என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.