சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, எதிர்வரும் 10ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், நிறைவேற்றப்படுவதற்காக, பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தீர்மான வரைவு பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மான வரைவு தேவையான திருத்தங்களுடன், வரும் 10ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.





