தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேர்காணலை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு, தூத்துக்குடி வடக்கு- தெற்கு, திருநெல்வேலி கிழக்கு- மத்திய தொகுதி, தென்காசி வடக்கு-தெற்கு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதற்கட்டமாக நேர்காணல் நடைபெறுகிறது.
தி.மு.க.வின் சார்பில் 7 ஆயிரத்து 967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுள் சுமார் 7 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் ஆயிரத்து 400 பேர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.