ஒன்ராரியோவின் நெடுஞ்சாலை 400 இன் இருபகுதி வழிகளும் மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக 15வாகனங்கள் வரையில் மோதி விபத்துக்குள்ளாகியமையை அடுத்து இந்த அறிவிப்பினை காவல்துறையினர் விடுத்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவமானது நண்பகலுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய பனிமூட்டமான நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் இந்த நெடுஞ்சாலையை மீள திறக்கும் எண்ணமில்லை என்று நெடுஞ்சாலை ஒழுங்குகள் தொடர்பான பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.





