இந்தியாவின் காரைக்காலுக்கும் சிறிலங்காவின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (Sagarmala Development Company Ltd), இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறுவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்தியுள்ளது.
இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திலீப்குமார் குப்தா, இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
இருநாடுகளுக்கிடையலும் பயணிகள் போக்குவரத்து சுமுகமாக ஆரம்பிக்க இருப்பதாக நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.