புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய 15 ஆயிரம் கோடி ரூபாவை இந்திரா குடும்பத்திற்கு வழங்கியதாக கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா, மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போதே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி,
“அமித்ஷா கூறியது என் மீது வைக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு. அதை நிரூபிக்க அமித்ஷாவிடம் சவால் விடுகிறேன்.
அவர் நிரூபிக்கவில்லை என்றால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
என்னையும் இந்திரா குடும்பத்தையும் களங்கப்படுத்த தவறான தகவல் வழங்கியதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன்.” என்றும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.