யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேருக்கு நேற்று, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கு, நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் பங்குபற்றி விட்டு வீடு திரும்பிய, மூவர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பண்ணாகத்தில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அச்சுவேலி சந்தை வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், மன்னார் மாந்தை மேற்கில் 4 பேருக்கும், நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது” என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.