தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அரசு இந்த வாரம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் வரும் 4 ஆம் திகதி தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.