கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத் திட்டம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்புக் குறித்து தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
இது தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள, தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்கா அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பில் ஆச்சரியப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முதலீடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே அனுமதி அளிக்க வேண்டுமே தவிர இந்திய தூதரகம் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.