புதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் சமீபத்தில் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை அங்கு பயிலும் மாணவர்களுக்கான பரீட்சை திகதி குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாராயணசாமி, தாமரை மலரும் என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்ட அவர் தற்போது புதுச்சேரி முதல்வராக ஆசைப்படுகிறார் என கூறினார்.
மேலும் எவரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு பரீட்சை குறித்த அறிவிப்பை விடுத்தமை ஏற்புடையதல்ல என்றும் விமர்சித்துள்ளார்.