தமது போராட்டத்தை நாளை தீவிரப்படுத்தப் போவதாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை, மீளப் பெற்றுத் தருமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று மூன்றாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தமக்கு ஆளுநரோ, சிறிலங்கா அரசாங்கமோ, உரிய பதிலைத் தராத காரணத்தினால், நாளை தொடக்கம், மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து இரவு பகலாக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.