சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா, நேற்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயர்சீவ் மார்சல் ராகேஷ்குமார் சிங் பதாரியா இரண்டு நாட்கள் பயணமாக நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளார்.
அவர் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும், மற்றும் சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளையும், இந்திய விமானப்படைத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அதேவேளை, பங்களாதேஷ் விமானப்படைத் தளபதியும், தற்போது சிறிலங்காவில் தங்கியுள்ளார்.
ஆறு நாட்கள் பயணமாக அவர் நேற்று கொழும்பைச் சென்றடைந்துள்ளார்.