மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தான் தமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய சரத்குமார், மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்திற்கான கூட்டணி என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம்.
தென்காசி, ஆலங்குளம் என எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன்.” என்றும் சரத்குமார் மேலும் கூறியுள்ளார்.