ரொரண்டோ மருத்துவர்கள் கொரோனா பரவலில் சாம்பல் நிற வலயத்திற்குள் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் சில்லறைக் கடைகளை மீளத்திறப்பது தொடர்பில் பரிசீலனைகளை செய்யுமாறும் கோரிக்கைவிடுத்தனர்.
ரொரண்டோவில் ஏற்கனவே அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் மற்றும் சில முக்கிய வர்த்தக நிறுவனங்கள் மீளத்திறப்பதற்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் காலத்தில் மேலும் சில புதிய விதிமுறைகளுடன் மீளத்திறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.





