கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் (ramesh jarkiholi) பதவி விலகலை மாநில முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆபாச வலைத்தளத்தில் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாச காணொளி வெளியானதை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
பெண் ஒருவருடன் அவர் தனிமையில் இருக்கும் ஆபாச காணொளி வெளியானதை அடுத்து, பெண் ஒருவரிடம் அமைச்சர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் முறைப்பாடு அளித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், அரசு வேலை கோரி அமைச்சரிடம் சென்றபோதே, அந்தப் பெண்ணை அவர் துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.