சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள படையினர் தயாராக இருக்க வேண்டும் என இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.
“பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம்.
உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட இந்திய இராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.
மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும்.
போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை நாம் தெளிவாக கற்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.