ஒன்ராரியோவில் இரண்டாவது தடுப்பூசி மருந்தளவை விநியோகிப்பதற்கான காலஅட்டவனை மீளாய்வு செய்யப்படுவதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் (Christine Elliott) தெரிவித்துள்ளார்.
பைசர் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகளின் இரண்டாவது கட்டம் வருவிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூவகை கொரோனா தடுப்பூசியையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மாகாண மட்டத்திலான விநியோகம் தடையின்றி செல்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள போதும் கால அட்டவனை மீளப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.