கனடாவின் நில எல்லைகளில் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று பரிசோதனைச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனடாவின் ஐந்து நில தொடர்பு எல்லைகளில் இவ்விதமான கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 11எல்லைகளில் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நில எல்லைகளின் ஊடாக பிரவேசிக்கும் எவரும் 72 மணிநேரத்திற்கு உட்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு அறிக்கையை வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதிகளில் சதாரணமாக முன்னெடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.