வடக்கு மாகாணத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூடம் ஆகியவற்றில், மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது, கார்கில்ஸ் திரையரங்கின் பணியாளர்கள் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஒருவருக்கும், , யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், காத்தான்குடியிலிருந்து வருகை தந்து, சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கும் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், குழந்தையை பிரசவித்த தாயார் உள்ளிட்ட மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், நேற்று தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.