சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலமும் பெருந்தோட்ட முதாலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நிலவிய கூட்டு ஒப்பந்த முறைமை இரத்தாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல நலன்புரி வசதிகளை இழக்க நேரிடும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்திருந்தார்.
இந்த புதிய தீர்மானத்தின்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக நாளாந்த வேதனமாக 900 ரூபாவும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ள மை குறிப்பிடத்தக்கது.