ஒன்ராறியோவில், Peterborough பகுதியில் உள்ள Severn Court மாணவர் தங்குமிடத்தில், 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்கு வார இறுதியில், முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று வரை 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்த தங்குமிடத்தில், இன்னமும் தொற்று உறுதிப்படுத்தப்படாத மேலும் 40 அதிக ஆபத்துள்ள முதல் நிலைத் தொடர்பாளர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மாணவர் தங்குமிடத்தில், தொற்று பதவியதற்கு சமூக ஒன்றுகூடல்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.