மியான்மரில் இருந்து தப்பி வந்த, 3 காவல்துறையினர் இந்தியாவின், மிசோரம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மார் எல்லையில் இருந்து 13 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றிலேயே மூன்று மியான்மார் காவல்துறையினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மியான்மர் இராணுவத்தின் கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை இராணுவம் தேடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.