தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், போட்டியிடுகின்றனர்.
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சண்முகமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், சண்முகநாதனும், நிலக்கோட்டை தனி தொகுதியில் தேன்மொழியும், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதிப் பங்கீடுகள் இன்னமும் முடிவடையாத நிலையில், அடுத்த வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.