மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
‘ஐரோப்பிய நாடுகளில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 6 வாரங்களாகக் குறைந்து வந்தது.
ஆனால், கடந்த வாரம் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகையான கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும், கொரோனாவின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, மீண்டும் அடிப்படையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டும்.
அத்துடன், கொரோனா தடுப்பூசி திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும்’ என்றும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.





