சிறிலங்காவில், இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், இடம்பெற்ற வீதி விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாத்திரம், 120 இற்கும் அதிகமான விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இதில், 11 பேர் உயிரிழந்தனர் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் நேற்று உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்றைய விபத்துச் சம்பவங்களில், 40 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண மேலும் கூறியுள்ளார்.