திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
எனினும். மதிமுக, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுக்களின் இன்னமும் இழுபறி நீடித்து வருகிறது.





