ஒன்ராரியோவில் இந்த மாதத்தின் நடுப்பகுதிக்குள் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஒன்ராரியர்களுக்குமான கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்பாட்டை அடுத்த கோடைகாலத்திற்குள் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் டக்போர்ட் தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணி கூடி இந்த திட்டங்களை இறுதி செய்துள்ளது.
மேலும், இரண்டாவது கட்ட மருந்தளவைச் செலுத்தும் செயற்பாடுகளை ஜுலைக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.