இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது” என தாம் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரணைதீவு தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் தாம் அமைச்சரை கூட்டத்தில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இரணைதீவு மக்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளை சந்தித்தப்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும் காடாக இருந்த இரணைதீவில் தாம் சிரமங்களுக்கு மத்தியில் சுத்தம் செய்து அங்கு குடியேறி வசித்து வருவதாக பொது மக்கள்’ டக்ளஸிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படுவது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அந்த அலுவலகம் இடமாற்றப்படாது என்று தமக்கு மத்திய அரசாங்கத்தின் காணி அமைச்சு உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் மற்றுமொரு வாக்குறுதியை வழங்கியுள்ளார்