கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை எட்டு இலட்சத்து 81ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 22 ஆயிரத்து 192பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 30ஆயிரத்து 146பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 572பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 29ஆயிரத்து 423பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.