கொரோனா தொற்று மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கத்தோலிக்கத் திருச்சபையின் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் ஒருவர் ஈராக்கிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது பயணமாக இது அமைந்துள்ளது.
ஈராக்கில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், ஈராக்கின் ஷியா முஸ்லிம் தலைவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும் பாப்பரசர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது பாப்பரசர் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள இர்பில் (Irbil) நகரில் உள்ள மைதானத்தில் பாரிய பிரார்த்தனை ஒன்றையும் நடத்தவுள்ளார்.
கொரோனா தொற்றை முன்னிட்டு ஈராக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பாப்பரசரின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் ஈராக்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் பாப்பரசரை ஈராக்கிய பிரதமர் முஸ்தபா அல் கதீமி (Mustafa al-Kadhimi) நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்றுள்ளார்.