வவுனியா- புளியங்குளத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புளியங்குளம் – இராமனுர் பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய ஆறுமுகம் பாலகிருஸ்ணன் என்பவரின் வீட்டுக்குச் சென்ற புளியங்குளம் காவல்துறையினர், இடியன் துப்பாக்கி இருக்கின்றதா? என விசாரித்து, கைது செய்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கி விட்டு கைது நள்ளிரவு 12 மணியளவில் அவரை சிறிலங்கா காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த நபரை உறவினர்கள் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.