அதிமுகவிடம், கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்துக் கொண்டுள்ளதாக தேமுதிக பேச்சாளர், பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அதிமுகவிடம், 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என முதலில் கேட்டோம்.
எனினும் இப்போது 25 தொகுதிகளாவது தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
கேட்கும் தொகுதிகளை தருவதாக இருந்தால் உடன்பாட்டில் கையெழுத்திடுவோம்.
திமுகவை தவிர வேறு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. இரண்டு நாட்களில் நல்ல முடிவு வரும்.” என்றும் அவர் அவர் கூறியுள்ளார்.