சீனாவின் பாதுகாப்பு செலவினம் முதல் முறையாக 20 ஆயிரம் கோடி டொலரைத் தாண்டியிருப்பதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, பாதுகாப்பு செலவு ஒதுக்கீடு 20 ஆயிரத்து 900 கோடி டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக சீனா தொடர்ந்து பாதுகாப்பு செலவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டில் பாதுகாப்பு செலவினங்களுக்கான தொகை 6.8 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒதுக்கீடு, அமெரிக்க பாதுகாப்பு செலவின ஒதுக்கீட்டில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.





