கனடிய சுகாதாரத்துறை நான்காவது கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஜோன்சன்அன்ட் ஜோன்சன் (Johnson and Johnson)
நிறுவனத்தின் தயாரிப்பான தடுப்பூசிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கனடாவில் மேலும் பரந்தளவிலான கொரோனா தடுப்பூசி விநியோகத்தினை மேற்கொள்ள முடியும் என்று பொது சுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி தெரேசா டாம் (THERESHA TAM) தெரிவித்தார்.
எனினும் இறுதியாக அனுமதி அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கான கொள்வனவுகள் எப்போது இடம்பெறப் போகின்றன என்பது குறித்து அமைச்சரிடத்திலேயே நிகழ்ச்சி திட்டமுள்ளதாகவும் அவர் கூறினார்.