பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, இந்தியாவின் முக்கிய இலக்கு என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்,
மெய்நிகர் முறையில் நடந்த இந்தியா – சுவீடன் இடையிலான உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், பருவநிலை மாற்றம் தான் இந்தியா, சுவீடன் நாடுகளுக்கு முக்கிய பிரச்னை என்றும், இதில், இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இயற்கையுடன் இணைந்து வாழ்வதே, இந்தியாவின் கலாசாரம்.
பாரீஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை இந்தியா 162 சதவீதம் அதிகரித்துள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.