ரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியம் ஆகியன கொரோனா தொற்றுபரவலில் வகைப்படுத்தப்பட்டுள்ள சாம்பல் நிற வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இப்பகுதிகளை மீளத்திறப்பதற்கான புதிய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிமை முதல் இப்பகுதிகளில் உள்ள சில்லறை வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளையும் மீள இயக்குவதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோவின் பல பகுதிகளில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தபோதும் இந்த இரண்டு பகுதிகளிலும் தொடர்ச்சியாக அந்த உத்தரவு நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.