ஒன்ராரியோவில் இன்றையதினம் இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆறுபேர் வரையில் மரணமடைந்துள்ளதாக பொதுசுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
24மணிநேரம் நிறைவடைவதற்குள் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையானது அடுத்துவரும் நாட்களை எச்சரிக்கைக்குரியதாக மாற்றுகின்றது என்று பொதுசுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்குமாறும் பொதுசுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்