இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு,, மத்திய சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, அடுத்த வாரம் தொடக்கம், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு, கொரோனா தடுப்பூசி போடும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தடுப்பூசி பதிவுக்காக ‘கோவின்’ வலைதளத்தில், இராணுவ மருத்துவமனைகளை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணி முடிவடைந்ததும், அடுத்த வாரம் முதல், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.