கொரொனா தொற்றுப் பரவல் ஆரம்பித்து ஓராண்டை எட்டுவுள்ள நிலையில் கனடாவில் இன்றையதினம் முதல் கொரோனா பரவல் நிலைமைகள் கணிசமாக குறைந்துள்ளது என்று பொதுசுகாதார அதிரிகளின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
உலகளாகவிய ரீதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நாளாக எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதியை சர்வதேச சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட அவர், கனடாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்து அதிகமாக காணப்பட்டது என்று குறிப்பிட்டார்.
எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலைமைகள் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான மாற்றத்தினைக் கண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலைமை நீடிக்குமானால் கனடாவின் மீளெழுச்சிக்காலம் மிக விரைவில் தோற்றம் பெறும் என்றும் அறிவித்துள்ளார்.