அமெரிக்க கடற்படையை மிஞ்சும் வகையில் சீனா தனது கடற்படையை பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
உலகிலேயே அதிக கப்பல்களைக் கொண்ட மிகப் பெரிய கடற்படையாக அமெரிக்க கடற்படையே விளங்கி வந்த நிலையில், இரண்டாவது இடத்தில் சீன கடற்படை இருந்தது.
இந்த நிலையில் சீனா தனது கடற்படைப் பலத்தை துரிதமாக அதிகரித்துள்ளது.
2020-ஆம் ஆண்டுக்குள் சீன போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 360 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையிடம் 355 போர்க்கப்பல்களே உள்ள நிலையில், சீன போர்க் கப்பல்களின் எண்ணிக்கை அதனை விட அதிகரித்துள்ளதால், உலகின் சக்திவாய்ந்த கடற்படை என்ற பெயரை, சீன கடற்படை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.