மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை இன்று எட்டியுள்ளது.
டெல்லியின் சிங்கு, திக்கிரி மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறவலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தின் நூறாவது நாளை கருப்பு தினமாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
இதனையெட்டி டெல்லி எல்லையான Kundli-Manesar- Palwal சாலையில் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.