செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) வாகனம், முதல் முறையாக 6.5 மீட்டர் தூரத்துக்கு நகர்ந்து சென்ற படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த மாதம் 18ம் நாள் பெர்சவரன்ஸ் ரோவரை (Perseverance rover) செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது.
இந்த நிலையில், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வாகனம், 6.5 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றுள்ளது.
4 மீட்டர் முன்னோக்கியும், பின்னர் 150 கோணத்தில் திரும்பி இரண்டரை மீட்டர் பின்நோக்கியும் திரும்பிய ரோவர் வாகனம், புதிய இடத்தில் நின்பதாக நாசா தெரிவித்துள்ளது.
ரோவர் வாகனத்தின் சக்கரங்கள் நகர்ந்த தடங்கள் தொடர்பான படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.