யாழ்ப்பாண நகரில், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று, பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
மூன்று உந்துருளிகளில் சென்ற ஆறு பேர் கொண்ட குழுவே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் வீட்டின் சாளரங்கள் அடித்து நொருக்கப்பட்டதாகவும், அங்கிருந்த பொருட்கள் மற்றும் வாகனம் ஒன்று என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக, காவல்துறையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.