ஹமில்டனில் (Hamilton) உள்ள ஒரு நடமாடும் தடுப்பூசி மையத்தில், முன்னுரிமை குழுவில் இல்லாதவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய, குற்றச்சாட்டை அடுத்து, மூன்று நகர பணியாளர்கள் நேற்றுமுன்தினம் விடுப்பில் செல்ல பணிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நடமாடும் தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் ஏனையவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக ஹமில்டன் பொது சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத 15 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹமில்டனில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.