சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில், ஆலடியைச் சேர்ந்த 22 வயதுடைய, சிவலிங்கம் கமில்தாஸ் என்ற இளைஞனே தாக்குதலுக்குள்ளாகிய நிலையில், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீதியால் உந்துருளியில் பயணித்த சிறிலங்கா இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.